Home நாடு பகாங் தெங்கு மக்கோத்தாவுடன் அன்வார் சந்திப்பு

பகாங் தெங்கு மக்கோத்தாவுடன் அன்வார் சந்திப்பு

1048
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த மே 16-ஆம் தேதி விடுதலையான பின்னர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கூட்டங்களில் உரையாற்றுவதோடு, ஆதரவாளர்களையும் சந்தித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாநில சுல்தான்களையும் மரியாதை நிமித்தம் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (மே 29) பகாங் மாநில இளவரசர் தெங்கு அப்துல்லாவை கோலாலம்பூரில் அன்வார் இப்ராகிம் சந்தித்தார்.

கடந்த மே 23-ஆம் தேதி தனது மகள் நுருல் இசாவுடன் ஜோகூர் பாரு சென்று ஜோகூர் சுல்தானையும், ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கடந்த மே 24-ஆம் தேதி கிளந்தானுக்கு தனது துணைவியார் மற்றும் குடும்பத்தினருடன் சென்று கிளந்தான் சுல்தான் மாஹ்முட் மற்றும் அவரது தாயாரையும் சந்தித்தார்.