சிங்கப்பூர் – இந்தோனிசியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதன் பின்னர் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு வருகை புரிந்தார்.
மலேசியாவில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரைச் சந்தித்து இந்தியா – மலேசியா இடையிலான நல்லுறவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திய மோடி, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.
அங்கு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், அதிபர் ஹாலிமா யாக்கோப் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் இந்தியா – சிங்கப்பூர் இடையில் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கடற்படைத் தளவாடங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்துவது, இரு தரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.