Home நாடு ஜோகூர் சுல்தானின் தாயார் காலமானார்

ஜோகூர் சுல்தானின் தாயார் காலமானார்

1374
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – ஜோகூர் சுல்தானின் தாயார் மரியாதைக்குரிய இஞ்சே பெசார் கல்சோம் அப்துல்லா தனது 83-வது வயதில் நேற்று இலண்டனில் காலமானார். அவரது மறைவை ஜோகூர் அரண்மனை அறிவித்தது.

அவரது உண்மையானப் பெயர் ஜோசப்பின் ரூபி டிரெவரோ (Josephine Ruby Trevorrow) என்பதாகும். நடப்பு ஜோகூர் சுல்தானின் தந்தையார் சுல்தான் இஸ்கண்டார் பிரிட்டனில் கல்வி பயின்றபோது அவர் டிரெவரோவைச் சந்தித்து அதன் பின்னர் அவர்கள் இருவரும் காதல் மணம் புரிந்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பின்னர் அவர் கல்சோம் அப்துல்லா என்ற பெயர் கொண்டார்.

#TamilSchoolmychoice

அவர்களுக்கு ஒரு மகன் 3 மகள்கள் என 4 பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவர்தான் இன்றைய ஜோகூர் சுல்தான். மூன்று மகள்கள் துங்கு கமாரியா அமினா, துங்கு பெசார் சபேதா, துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா ஆகியோர் ஆவர். இவர்களில் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா பகாங் இளவரசர் தெங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷாவின் துணைவியார் ஆவார்.