Home நாடு ராய்ஸ் யாத்திம் பெர்சாத்து கட்சியில் இணைந்தார்

ராய்ஸ் யாத்திம் பெர்சாத்து கட்சியில் இணைந்தார்

880
0
SHARE
Ad
டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம்

புத்ரா ஜெயா – அம்னோவின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் நேற்று திங்கட்கிழமை (4 ஜூன்) துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அம்னோவுக்கும், நஜிப்புக்கும் எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்தவர்களில் ராய்ஸ் யாத்திம் முக்கியமானவர். நெகிரி செம்பிலான் மாநிலத்தை பக்காத்தான் ஹரப்பான் கைப்பற்றியதற்கு ராய்ஸ் யாத்திமின் பங்கு முக்கியமானது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்துள்ளன.

முன்னாள் ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினருமான ராய்ஸ், ஜெலுபு தொகுதி மஇகாவுடன் அம்னோ மாற்றிக் கொள்ளப்பட முயற்சி செய்த வேளையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் காரணமாகவே, அந்த தொகுதி மாற்றம் கைவிடப்பட்டது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் நெருங்கி வந்த வேளையில் துணிந்து மேடையேறி அம்னோவுக்கு எதிராகவும், பக்காத்தானுக்கு ஆதரவாகவும் முழங்கினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பல கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது அதிகாரபூர்வமாக பெர்சாத்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.