Home 13வது பொதுத் தேர்தல் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் போட்டி?

காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் போட்டி?

1182
0
SHARE
Ad

XavierJayakumarகாப்பார், மார்ச் 28- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் மக்கள் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று நம்பப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையிலும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் அவர் சிறப்பான சேவையை ஆற்றி வந்துள்ளதைத் தொடர்ந்து காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில்  அவரை வேட்பாளராக நிறுத்த டத்தோஸ்ரீ  அன்வார் முடிவு செய்துள்ளார்.

இம்முறை  மக்கள் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்  பி.கே.ஆர். கட்சி சார்பில் அமைச்சராகவோ, துணை அமைச்சராகவோ பதவி உயர்வு பெறுவார் என்றும்  கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

தற்போதைய காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம் கோலசிலாங்கூர் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் பிகேஆர் வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மாணிக்கவாசகத்தின் கடந்த கால போராட்டங்களையும் சேவைகளையும் கவனத்தில் அவரையும் கைவிட்டு விடாமல் பொதுத் தேர்தல் களத்தில் இறக்க அன்வார் இப்ராகிம் முடிவு செய்திருக்கின்றார்.

அதே வேளையில்  ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியில் டாக்டர் சேவியர் ஜெயக்குமாருக்கு பதிலாக அன்வாருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுபவரும், அவரின் உதவியாளர்களில் ஒருவருமான சுரேஷ்குமார் நிறுத்தப்படலாம் என்றும் பிகேஆர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.