கோலாலம்பூர், மார்ச் 29-நாடாளுமன்றம் ஏப்ரல் 30ஆம் தேதி இயல்பாகவே கலைந்துவிடும் என்று தேர்தல் ஆணையர் டான்ஸ்ரீ அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இறுதி நாள் ஏப்ரல் 28 என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஏப்ரல் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த தேதி கணக்கில் எடுத்து கொள்ளப்படமாட்டாது.
ஏப்ரல் 29ஆம் தேதி திங்கட்கிழமை நள்ளிரவு வரை நாடாளுமன்றத்தின் கடைசி நாளாகும். ஏப்ரல் 30ஆம் தேதி காலை நாடாளுமன்றம் இயல்பாகவே கலைந்து விடும் என்று அவர் கூறினார்.