Home உலகம் ஸ்பெயின் முதல் வெற்றி! (ஸ்பெயின் 1 – ஈரான் 0)

ஸ்பெயின் முதல் வெற்றி! (ஸ்பெயின் 1 – ஈரான் 0)

943
0
SHARE
Ad

மாஸ்கோ – நேற்று வியாழக்கிழமை (ஜூன் 20) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 கோல் எண்ணிக்கையில் ஈரானைத் தோற்கடித்துத் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

நேற்று மலேசிய நேரப்படி அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.

முதல் பாதியில் இரு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காமல் விளையாடின. ஸ்பெயினின் ஒரே கோலை டியகோ கோஸ்தா 54-வது நிமிடத்தில் அடித்து தனது நாட்டை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

‘பி’ பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அடுத்த சுற்றுக்கு ஸ்பெயின் செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே போர்ச்சுகலுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 3-3 என்ற கோல்களில் ஸ்பெயின் சமநிலை கண்டது.

எதிர்வரும் ஜூன் 25-ஆம் தேதி இதே ‘பி’ பிரிவுக்கான மற்றொரு சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின் மொரோக்கோவையும் ஈரான், போர்ச்சுகலையும் சந்திக்கும்.