Home நாடு நகைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் வந்தது எப்படி? – நஜிப் விளக்கம்!

நகைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் வந்தது எப்படி? – நஜிப் விளக்கம்!

893
0
SHARE
Ad

லங்காவி – தமது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆடம்பர கைப்பைகள், நகைகள் உள்ளிட்ட ஏராளமான விலையுயர்ந்த பொருட்கள் வந்தது எப்படி? என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கமளித்திருக்கிறார்.

லங்காவியில் குடும்பத்தாரோடு விடுமுறையைக் கழித்து வரும் நஜிப் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 1எம்டிபி நிதி தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு எப்படி வந்தது என்பது தெரியாது என்றும், சொகுசுக் கப்பல், ஓவியங்கள் வாங்க தான் அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

“நான் சொகுசுக் கப்பலில் போகவில்லை. ஓவியங்களை வாங்கவில்லை. அந்த ஓவியங்களை நான் பார்த்ததே இல்லை.

#TamilSchoolmychoice

“அவையெல்லாம் வாங்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. எனது அனுமதியில்லாமல் அவை வாங்கப்பட்டிருக்கின்றன. நான் அரசாங்கத்தில் நீண்ட காலமாக இருந்திருக்கிறேன். எது சரி? எது தவறு என்று எனக்கு நன்றாகத் தெரியும்” என நஜிப் தெரிவித்திருக்கிறார்.

மேலும், விலையுயர்ந்த நகைகள், கைப்பைகள் உள்ளிட்ட பொருட்கள் தனது மகளின் திருமணத்தின் போது அன்பளிப்பாக வந்தது என்றும், தமது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 114 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அம்னோவின் நிதி என்றும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.