எனினும், அனைத்து உணவகங்களுக்கும் இவ்வாண்டு இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்குள் அனைத்து உணவகங்களிலும் மலேசியர்களைப் பணியில் அமர்த்தும் படியும் குலசேகரன் கூறியிருக்கிறார்.
இப்புதியக் கட்டுப்பாடு, வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் குலசேகரன் அறிவித்திருக்கிறார்.
“எனவே, உணவகங்களில் இனி நமக்கு உள்ளூர் சமயல்கலைஞர்கள் தான் சமைக்க வேண்டும். அதில் எந்த ஒரு சமரசமும் கிடையாது. வரும் டிசம்பர் 31-ம் தேதி வரையில் உங்களுக்கு கால அவகாசம் வழங்குகிறோம். நீங்கள் செய்யவில்லை என்றால், எங்களால் உங்களுக்கு உதவ முடியாது” என்று குலசேகரன் தெரிவித்திருக்கிறார்.