Home உலகம் இறுதி நிமிடங்களில் 2-0 கோல்களில் பிரேசில் வெற்றி

இறுதி நிமிடங்களில் 2-0 கோல்களில் பிரேசில் வெற்றி

1096
0
SHARE
Ad

மாஸ்கோ – இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஆட்டத்தில் பிரேசில் 2-0 கோல் எண்ணிக்கையில் சக தென் அமெரிக்க நாடான கோஸ்தா ரிக்காவைத் தோற்கடித்தது.

90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிவடைந்த பின்னரும் இரண்டு குழுக்களும் கோல்கள் எதுவும் அடிக்காமல் விளையாடின. 90 நிமிடங்களுக்குப் பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அடுத்தடுத்து 2 கோல்களைப் புகுத்தி பிரேசில் பரபரப்பை ஏற்படுத்தித் தனது வெற்றியைப் பதிவு செய்தது.

முதலாவது கோலை கோட்டின்ஹோ அடிக்க, இரண்டாவது கோலை பிரேசிலின் முன்னணி ஆட்டக்காரர் நெய்மார் புகுத்தினார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து கோஸ்தா ரிக்கா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் 16 நாடுகளின் பட்டியலில் இடம் பெற முடியாமல் போனது.

இதனைத் தொடர்ந்து ‘இ’ பிரிவில் பிரேசில் 4 புள்ளிகளுடன் முன்னணி வகிக்கிறது.