Home நாடு சாலையோரக் கடையில் அமைச்சர்கள்

சாலையோரக் கடையில் அமைச்சர்கள்

1960
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பல்வேறு கோணங்களில் எளிமையையும், சிக்கனத்தையும், சேமிப்பையும், ஆடம்பரமில்லாத அரசியல் பணிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற ஜசெகவின் உச்சமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஜசெக தலைவர்கள், இரவு 11 மணியளவில், கோலாலம்பூர் ஜசெக தலைமையகத்தின் அருகில் உள்ள ஒரு சாதாரண சாலையோரக் கடையில் அமர்ந்து ‘மீ ஹூன் லக்சா’ உணவருந்தி மகிழ்ந்தனர்.

அந்தப் புகைப்படத்தை நிதியமைச்சர் லிம் குவான் எங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

லிம் குவான் எங்குடன் மனித வள அமைச்சர் எம்.குலசேகரனும் மற்ற ஜசெக தலைவர்களும் நேற்றைய இரவு உணவு சந்திப்பில் கலந்து கொண்டனர்.

படம்: நன்றி – லிம் குவான் எங் டுவிட்டர் பக்கம்