Home நாடு உணவகங்களில் மலேசியர்கள் மட்டும் கொள்கை: உரிமையாளர்கள் அதிர்ச்சி!

உணவகங்களில் மலேசியர்கள் மட்டும் கொள்கை: உரிமையாளர்கள் அதிர்ச்சி!

1577
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய உணவகங்களில் வரும் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் மலேசியர்கள் மட்டுமே சமையல்காரர்களாகப் பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்றும் அந்நியத் தொழிலாளர்கள் அந்தப் பொறுப்பில் உணவகங்களில் வேலை செய்வதற்குத் தடை விதிக்கப்படுவதாகவும் விதிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடு குறித்து உணவக உரிமையாளர்கள் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட இந்த அறிவிப்பு அனைத்து உணவக உரிமையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இது குறித்து மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆயோப் கான் முகமட் யாகோப் கூறுகையில், “அரசாங்கத்தின் இந்த முடிவு ‘அதிர்ச்சியாகவும், கொடூரமாகவும்’ இருக்கிறது. அரசாங்கம் முடிவெடுப்பதற்கு முன்பாக எங்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

“மலேசிய இந்திய உணவகங்களில் உள்ளூர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது அவ்வளவு எளிதல்ல. மலேசியாவில் பெரும்பாலான இந்திய முஸ்லிம் உணவகங்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் தான் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். காரணம் அவர்களின் சம்பளம் நியாயமானது மற்றும் அவர்கள் கலாச்சார அடிப்படையில் எங்களுடன் ஒத்துப் போவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், உள்ளூர் சமையல் கலைஞர்களை, பாரம்பரிய உணவுகளைச் சமைக்கப் பயிற்சி அளிப்பதற்கு நீண்ட நாட்களாகும் என்றும் மற்ற உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.