Home உலகம் 3-0 : போலந்தை வீட்டுக்கு அனுப்பியது கொலம்பியா!

3-0 : போலந்தை வீட்டுக்கு அனுப்பியது கொலம்பியா!

846
0
SHARE
Ad

மாஸ்கோ – நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான மூன்றாவது   போட்டியில் போலந்தை 3-0 கோல்களில் தோற்கடித்ததன் மூலம் கொலம்பியா இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது.

‘எச்’ பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம், தங்களின் உலகக் கிண்ணக் கனவுகளைக் கலைத்து விட்ட போலந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இரண்டு குழுக்களுமே தங்களின் முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியிருந்த காரணத்தால், இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகியிருந்தனர்.

#TamilSchoolmychoice

ஆட்டம் தொடங்கிய 40-வது நிமிடத்தில் கொலம்பிய ஆட்டக்காரர் மினா முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஃபால்கோவா 70-வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் புகுத்தி கொலம்பியாவை தொடர்ந்து முன்னிறுத்தினார்.

ஜூவான் குவாட்ரோடோ அடுத்த ஐந்து நிமிடங்களில் – ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் – மற்றொரு கோலைப் புகுத்தி கொலம்பியாவின் வெற்றியை உறுதி செய்ய, அதற்குப் பின்னர் கோல் எதுவும் அடிக்க முடியாமல் போலந்து திணறியது.

இதனைத் தொடர்ந்து 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் போலந்தை வெற்றி கொண்டு கொலம்பியா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.