Home உலகம் உலகக் கிண்ணம்: செனிகல் 2 – ஜப்பான் 2

உலகக் கிண்ணம்: செனிகல் 2 – ஜப்பான் 2

711
0
SHARE
Ad

மாஸ்கோ – இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இரண்டாவது  போட்டியில் செனிகல் – ஜப்பான் இரு நாடுகளும் மோதின. இந்த ஆட்டம் ‘எச்’ பிரிவுக்கான ஆட்டமாகும்.

முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல் போட்டு செனிகல் ஜப்பானுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தது.

செனிகலின் முதல் கோலை, 11-வது நிமிடத்தில் அதன் விளையாட்டாளர் மேன் அடித்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும் ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஜப்பானின் தகாஷி இனுய் ஒரு கோலைப் புகுத்தி ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து 1-1 கோல் எண்ணிக்கையில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 71-வது நிமிடத்தில் 19 வயது செனிகல் ஆட்டக்காரர் வேக் ஒரு கோல் போட்டு மீண்டும் செனிகலை முன்னணிக்குக் கொண்டு வந்தார். எனினும் அந்த மகிழ்ச்சி செனிகல் குழுவுக்கு நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் – 78-வது நிமிடத்தில் – ஜப்பான் தனது விளையாட்டாளர் ஹோண்டா மூலம் மற்றொரு கோலைப் புகுத்தியது.

இதனைத் தொடர்ந்து 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் இருநாடுகளும் சமநிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டன.