Home நாடு அம்னோவின் புதிய வெற்றி முகங்கள்!

அம்னோவின் புதிய வெற்றி முகங்கள்!

876
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ இளைஞர் பகுதித் தலைவருக்கான தேர்தலில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி வெற்றி பெற்றது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அம்னோவின் புதிய இளைஞர் பகுதித் தலைவராக அவர் செயல்படுவார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 24) இரவு 9.00 மணியளவில் அம்னோ தலைமையகத்தில் அம்னோ இளைஞர், மகளிர் பகுதிக்கான தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன.

அம்னோ புத்ரி பிரிவுக்கான தலைவர் தேர்தலில் நடப்பு துணைத் தலைவரான சாஹிடா சாரிக் கான் வெற்றி பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அம்னோ மகளிர் பகுதியின் தலைவராக டாக்டர் நோராய்னி அகமட் வெற்றி பெற்றிருக்கிறார்.