
சென்னை – வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்த பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தில் சிம்புவைக் கதாநாயகனாக வைத்து இயக்குகிறார்.
தற்போது மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் நடித்து வரும் சிம்பு அடுத்து வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ள ‘பார்ட்டி’ திரைப்படம் தற்போது திரையீட்டிற்குத் தயாராக உள்ளது.
அந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில்தான் சிம்பு அவருடன் இணைகிறார்.
சிம்பு நடித்திருக்கும் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பும் ஏறத்தாழ முடிவடைந்து விட்டதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.