Home வணிகம்/தொழில் நுட்பம் புரோட்டான் புதிய எஸ்யுவி கார் சிறப்பாக இருப்பதாக மகாதீர் கருத்து!

புரோட்டான் புதிய எஸ்யுவி கார் சிறப்பாக இருப்பதாக மகாதீர் கருத்து!

1213
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புரோட்டான் அறிமுகப்படுத்தவிருக்கும் எஸ்யுவி (sport utility vehicle) இரக காரை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஓட்டிப் பார்த்து, அது குறித்து தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

“இந்த கார் மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல தரத்துடன் இருக்கிறது. சந்தையில் இது ஒரு சிறந்த காராக இருக்கும்” என்று பெர்சாத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகாதீர் தெரிவித்தார்.

கீலி போயூ எஸ்யுவி இரக காரை வரும் அக்டோபர் மாதம் புரோட்டான் வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice