Home நாடு ரபிசி, சானுக்கு 20,000 ரிங்கிட் வழங்க நஜிப், ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ரபிசி, சானுக்கு 20,000 ரிங்கிட் வழங்க நஜிப், ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

1049
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்கும், சான் என்பவருக்கும் 20,000 ரிங்கிட் வழக்கு செலவுத் தொகை தர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு, பாரிசான் அரசாங்கம் எண்ணெய்க்கு வழங்கிய மானியம் தொடர்பாக ரபிசி ரம்லியும், மீடியா ராக்யாட் இணையதள உரிமையாளர் சான் சீ கோங்கும், பொய்யான விமர்சனங்களை வெளியிட்டதாகக் கூறி நஜிப்பும், ரோஸ்மாவும் வழக்குத் தொடுத்திருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அவ்வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டதால், ரபிசிக்கும், சானுக்கும் செலவுத் தொகையை வழங்க நீதிபதி ரோஹானி இஸ்மாயில் உத்தரவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.