Home கலை உலகம் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பாடல்கள் வெளியீடு!

மக்கள் நீதி மய்யம் கட்சிப் பாடல்கள் வெளியீடு!

1351
0
SHARE
Ad

சென்னை – மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சாரப் பாடல்களை தாஜ் நூர் இசையில், கவிஞர் சினேகன் எழுதியிருக்கிறார்.

அப்பாடல்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில், கமலுக்குப் பொன்னாடைகள் போர்த்தி மாலைகள் போடப்பட்டன.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் விழாவில் பேசிய கமல், இனி வரும் விழாக்களில் பொன்னாடை போர்த்துவதையும், மாலைகள் போடுவதையும் தவிர்க்கும் படி தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார்.

மேலும், “நாம் சுமக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்க, எதற்காக இந்த மாலைகளை சுமக்க வேண்டும்?” என்று கமல் தனக்கே உரிய நய்யாண்டியில் கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழகத்தில் அரை நூற்றாண்டாகப் படிந்திருக்கும் கறையைப் போக்குவதற்குக் குறைந்தது 20 ஆண்டுகளாவது ஆகும் என்று கூறிய கமல், மாற்றம் வரும் போது தான் இருப்பேனா எனத் தெரியாது ஆனால் விதையாக இருப்பேன் என்றும் கூறினார்.