Home நாடு அமைச்சரவைப் பட்டியல்: ஹராப்பான் தலைவர்களிடத்தில் எதிர்ப்பு இல்லை!

அமைச்சரவைப் பட்டியல்: ஹராப்பான் தலைவர்களிடத்தில் எதிர்ப்பு இல்லை!

912
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அமைச்சரவைப் பட்டியலில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

“கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் எதிர்பார்த்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கமாட்டார்கள்.

“நான் அமைச்சர்கள், துணையமைச்சர்கள் ஆகியோரைக் கூப்பிட்டு, அவர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்களா? எனக் கேட்டேன். ஆச்சரியமாக அவர்கள் யாரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

#TamilSchoolmychoice

“அவர்களில் சிலர், நான் இதைக் கொடுத்திருக்க வேண்டும். அதைக் கொடுத்திருக்க வேண்டும் என நினைத்தனர். ஆனால் நான் அவர்களிடம் விளக்கமளித்தேன். நான் ஏற்கனவே அந்த இடங்களை நிரப்பிவிட்டேன் என்று. எனவே அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்” என்று மகாதீர் தெரிவித்திருக்கிறார்.