Home நாடு ஜாவா மொழி பேசும் சிலாங்கூர் சட்டமன்ற அவைத் தலைவர்

ஜாவா மொழி பேசும் சிலாங்கூர் சட்டமன்ற அவைத் தலைவர்

687
0
SHARE
Ad
இங் சுவீ லிம் – சிலாங்கூர் சட்டமன்ற அவைத் தலைவர்

ஷா ஆலாம் – சிலாங்கூர் சட்டமன்றத்திற்கான புதிய அவைத் தலைவராக (சபாநாயகர்) நியமிக்கப்பட்டிருக்கும் இங் சுவீ லிம் நான்கு தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றவர் என்பதுதான் பலருக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் பலருக்குத் தெரியாத ஓர் உண்மை என்னவென்றால் ஒரு சீனரான இங் சுவீ லிம் இந்தோனிசியர்களிடையே அதிகம் பேசப்படும் ஜாவா மொழியில் சரளமாகப் பேசக் கூடியவர் என்பதுதான்.

சட்டமன்றத்தில் இவரது உரையைக் கடந்த காலங்களில் தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரசித்துக் கேட்டு வந்தனர். ஆனால் இப்போதோ இவரது சொல்படி நடக்க வேண்டிய நிலைமைக்கு சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

பிறகென்ன? சட்டமன்ற அவைத் தலைவர் என்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் சொல்படி கேட்டுத்தானே ஆகவேண்டும்!

ஜசெக கட்சியின் செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினராக 14-வது பொதுத் தேர்தலில் நான்காவது முறையாக வென்றவர் இங் சுவீ லிம்.

இவருக்குத் துணையாக துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டிருக்கிறார், பிகேஆர் கட்சியின் பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினர் கைருடின் ஒத்மான். இவர் பாஸ் கட்சியிலிருந்து விலகி 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக பிகேஆர் கட்சியில் இணைந்தார்.