Home நாடு பிஎன்பி குழுமத் தலைவராக சேத்தி நியமனம்!

பிஎன்பி குழுமத் தலைவராக சேத்தி நியமனம்!

779
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிஎன்பி (Permodalan Nasional Bhd) குழுமத் தலைவர் வாகித் ஓமார் இன்று வெள்ளிக்கிழமை பதவி விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக பேங்க் நெகாராவின் முன்னாள் ஆளுநர் டான்ஸ்ரீ சேத்தி அக்தார் அசிஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஜூலை 1-ம் தேதி முதல் அவர் தனது பணிகளைத் துவங்கவிருக்கிறார்.

சேத்தி தற்போது, பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice