Home உலகம் 1-0 – சுவீடன் சுவிட்சர்லாந்தை வென்றது

1-0 – சுவீடன் சுவிட்சர்லாந்தை வென்றது

1134
0
SHARE
Ad
வெற்றிக் களிப்பில் சுவீடன் விளையாட்டாளர்கள்

மாஸ்கோ – உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நடைபெற்ற சுவீடன் – சுவிட்சர்லாந்து இடையிலான ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்தைத் தோற்கடித்து சுவீடன் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சுவீடனின் ஒரே கோலை இரண்டாவது பாதி ஆட்டத்தில் 66-வது நிமிடத்தில் ஃபோர்ஸ்பெர்க் அடித்தார். சுவிட்சர்லாந்து ஆட்டக்காரர் அந்தப் பந்தைத் தடுக்க முயற்சி செய்ய – எதிர்பாராதவிதமாக அந்தப் பந்து கோல் வலைக்குள் புகுந்து விட்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து கால் இறுதி ஆட்டத்தில் சுவீடன் கால் வைக்கிறது.