Home நாடு அமைச்சுப் பொறுப்புகளை ஒப்படைத்தார் கைரி ஜமாலுடின்

அமைச்சுப் பொறுப்புகளை ஒப்படைத்தார் கைரி ஜமாலுடின்

956
0
SHARE
Ad
சைட் சாதிக் – கைரி ஜமாலுடின்

புத்ரா ஜெயா – நேற்று செவ்வாய்க்கிழமை முதன் முதலாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பணிகளைத் தொடங்கிய சைட் சாதிக்குக்கு வாழ்த்து கூறியதோடு, சம்பிரதாயப்படி தனது அமைச்சுப் பொறுப்புகளை அவர் வசம் ஒப்படைத்தார் கைரி ஜமாலுடின்.

இளைஞர் விளையாட்டுத் துறை அலுவலகத்திற்கு வருகை தந்த கைரி ஜமாலுடினோடு, முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக டத்தோ எம்.சரவணனும் வருகை தந்தார்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய சைட் சாதிக் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் கைரி ஜமாலுடினின் ஆலோசனைகளும் கருத்துகளும் தனது அமைச்சுப் பணியில் பெறப்படும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கைரி ஜமாலுடின் இளைஞர்களின் விளையாட்டுத் துறைக்காகவும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் நிறைய பங்களிப்புகளை வழங்கியிருப்பதாகவும் சைட் சாதிக் நினைவு கூர்ந்தார்.