Home நாடு நஜிப் நீதிமன்றம் கொண்டு வரப்படுகிறார்

நஜிப் நீதிமன்றம் கொண்டு வரப்படுகிறார்

884
0
SHARE
Ad
4 ஜூலை 2018 – நீதிமன்றம் வரும் நஜிப்

(காலை 8.00 மணி நிலவரம்)

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தடுப்பு முகாமில் (லோக் அப்) தடுத்து வைக்கப்பட்டு இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் காவல் துறையினரின் பாதுகாப்போடு வாகனங்கள் அணிவகுக்க கோலாலம்பூர் நீதிமன்றம் கொண்டுவரப்படுகிறார்.

  • அவர் காரில் கொண்டு வரப்படுவதை பெர்னாமா தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
  • அவர் மீது 10 குற்றச்சாட்டுகள் வரை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அவருக்கு எதிரான அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தலைமையேற்கிறார்.
  • வழக்கம்போல காலையில் கோலாலம்பூர் சாலைகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலின் நடுவே, காவல் துறை கார்கள் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்திச் செல்ல காரில் நஜிப் கோலாலம்பூர் நீதிமன்றம் கொண்டுவரப்படுகிறார்.