Home நாடு நஜிப் வழக்கு நிதி திரட்டப்படுகிறது

நஜிப் வழக்கு நிதி திரட்டப்படுகிறது

1203
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சரியாக 2 மாதங்களுக்கு முன்னால் அவர் சகல அதிகாரங்களும் படைத்த நாட்டின் பலம் வாய்ந்த பிரதமர். பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததும், அவர் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்டவைகளின் மதிப்போ 1 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம் எனக்கூறியது காவல் துறை.

ஜூலை 4 நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நஜிப்பிற்கு 1 மில்லியன் ரிங்கிட் உத்தரவாதத் தொகை (ஜாமீன்) என நிர்ணயித்தது நீதிமன்றம்.

அவரது புதல்வரும் புதல்வியும் அவருக்கு உத்தரவாதக் கையெழுத்திட முன்வர 5 இலட்சம் ரிங்கிட்டும் உடனடியாகச் செலுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

எஞ்சிய 5 இலட்சம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையை எதிர்வரும் புதன்கிழமை ஜூலை 11-ஆம் தேதிக்குள் செலுத்த அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

தனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால் உத்தரவாதத் தொகைக்கு பதிலாக தனது இல்லங்கள் மீதான நிலப்பட்டாக்களை அடமானம் வைக்கத் தயாராக இருப்பதாக நஜிப் கூறியிருக்கிறார்.

விதிவசத்தால் ஒரு மனிதனின் நிலைமை எப்படியெல்லாம் மாறும் – என்பதற்கு இன்றைய நிதர்சன உதாரணம், நஜிப் துன் ரசாக்!

இந்நிலையில் அவருக்கு ஆதரவு தரும் அவரது ஆதரவாளர்களும், அம்னோவினரும் சட்ட உதவி நிதி ஒன்றைத் தொடக்கியுள்ளனர். இந்த நிதிக்கு இதுவரையில் 80 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் கூடுதலாக திரட்டப்பட்டிருக்கிறது.