Home நாடு பிகேஆர் தலைவராக அன்வார் போட்டியிடலாம்!

பிகேஆர் தலைவராக அன்வார் போட்டியிடலாம்!

845
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இதுநாள்வரை பிகேஆர் ஆலோசகர் என்றும் பொதுத் தலைவர் என்றும் அழைக்கப்பட்டு வந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் நேரடியாகத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் துணைத் தலைவர் டாக்டர் அஃபிப் பஹார்டின் இந்த வேண்டுகோளை பகிரங்கமாக விடுத்துள்ளார்.

துன் மகாதீரிடமிருந்து அடுத்து பிரதமர் பொறுப்பை அன்வார் ஏற்க வேண்டும் என்றால் அவர் இனி கட்சியின் தேசியத் தலைவராக நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் பஹார்டின் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

தற்போது பிகேஆர் கட்சித் தலைவராக அன்வாரின் துணைவியார் வான் அசிசா செயல்பட்டு வருகிறார்.