Home நாடு 1எம்டிபி புலனாய்வு – 50 விழுக்காடு பூர்த்தி

1எம்டிபி புலனாய்வு – 50 விழுக்காடு பூர்த்தி

925
0
SHARE
Ad
முகமட் சுக்ரி மாமன்னரால் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்ட காட்சி

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு வந்த புலனாய்வுகள் ஏறத்தாழ 50 விழுக்காடு பூர்த்தியாகி விட்டதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் முகமட் சுக்ரி அப்துல் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் சம்பந்தப்பட்ட புலனாய்வுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் இனி வெளிநாடுகளில் 1எம்டிபி குறித்த புலனாய்வுகள் தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.