மலாக்கா – சிறிய மாநிலமாக இருந்தாலும், நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்டது மலாக்கா. தேசிய முன்னணியின் கோட்டையாக எப்போதும் கருதப்பட்ட இந்த மாநிலமும் யாரும் எதிர்பாராத விதமாக 14-வது பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகளின் வசம் வீழ்ந்தது.
பல்லாண்டுகளாக, தேசிய முன்னணி சார்பில் ஒரே ஒரு சட்டமன்றம் மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டு, அந்தத் தொகுதியில் வெற்றி பெறும் மஇகா வேட்பாளர் மலாக்கா மாநில அரசாங்கத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராக இடம் பெற்று வந்தார்.
அந்த வகையில் கடந்த 2013-இல் காடெக் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்தார் டத்தோ மகாதேவன்.
2018 பொதுத் தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட மஇகா தலைமைத்துவம் வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு மாற்றாக, காடெக் சட்டமன்றத்திற்கு மஇகா/தேசிய முன்னணி வேட்பாளராக மஇகா மலாக்கா மாநிலச் செயலாளர் பி.பன்னீர் செல்வம் நிறுத்தப்பட்டார்.
NEGERI | MELAKA |
---|---|
DUN | N.07 – GADEK |
PARTI MENANG | PKR |
MAJORITI UNDI | 307 |
NAMA PADA KERTAS UNDI | BIL. UNDI |
PANIRCHELVAM A/L PICHAMUTHU (BN) | 4085 |
EMRANSYAH BIN ISMAIL (PAS) | 1865 |
G. SAMINATHAN (PKR) | 4392 |
பாரம்பரியமாக மஇகா வெற்றி பெற்று வந்துள்ள தொகுதி என்பதால் மிக எளிதாக பன்னீர் செல்வம் வெற்றி பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தன. பக்காத்தான் கூட்டணியின் ஜசெக வேட்பாளர் ஜி.சாமிநாதன் 307 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
யார் இந்த சாமிநாதன் என்ற கேள்வியை அனைவரும் கேட்டுக் கொண்டிருந்த தருணங்களிலேயே அடுத்த அதிரடியாக மலாக்கா மாநிலத்தில் பெரும்பான்மை பெற்று பக்காத்தான் கூட்டணி அரசாங்கம் ஆட்சி அமைக்க, ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றார் சாமிநாதன்.
ஆட்சிக் குழு உறுப்பினராக அவரது அனுபவங்கள் என்ன? – தனது பதவிக் காலத்தில் எதிர்நோக்கப்போகும் சவால்கள் என்ன? –
செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கீழ்க்காணும் காணொளியின் வழி எளிமையும், யதார்த்தமும் கலந்து விவரிக்கிறார் சாமிநாதன்!
– இரா.முத்தரசன்
அடுத்து :
மலாக்கா மாநிலத்தில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? – செல்லியல் நேர்காணலில் விவரிக்கிறார் சாமிநாதன்