இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மைநாடி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெயந்திரன் டான்ஸ்ரீ சின்னதுரை கலந்து கொண்டார். ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் நாடு தழுவிய அளவில் ஏறக்குறைய 300 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்றனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மைநாடி அறவாரியத்தின் தலைவர் டாக்டர் ஜெயந்திரன் கலந்து சிறப்பித்ததோடு, சிறப்புரையும் ஆற்றினார்.
“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில், வழிவகை செய்ய வேண்டும். தகவல் தொழில் நுட்ப ஆளுமை இல்லாததால் பொது உயர்க்கல்வி கூடங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன, மேலும் மைநாடி அறவாரியம் இந்திய சமூகத்திற்கு பலதரப்பட்ட வகையில் உதவிகளை நல்கும் ஓர் அமைப்பே தவிர தேசிய முன்னணி கட்சியின் ஆதரவு அமைப்பல்ல. மைநாடி அறவாரியம் தேவைப்படுவோருக்கு நேரடியாக நிதி உதவிகளை வழங்கும் ஓர் அமைப்பாகும், வசதி குறைந்த ஆனால் கல்வியில் சிறந்து அடைவுநிலையைக் கொண்டுள்ள மாணவர்கள் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வதற்கு இத்திட்டம் உதவுகிறது. எடுத்துக்காட்டிற்கு, தந்தை லோரி ஓட்டுநராகவும் தாயார் தொழிற்சாலை பணியாளராகவும் உள்ள ஒரு சிறந்த மலாயாப் பல்கலைக்கழக மாணவருக்கு உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட சிறப்பு வகுப்பு மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்கி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பசியின்றி மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் ஒரு வேளையாவது சத்தான உணவு வழங்குதல் அவசியமாகிறது” என்று கூறி,
தொடர்ந்து சிறப்பான முறையில் கணினி வகுப்புக்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் நடத்தி வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
அடுத்து :