Home நாடு லிம் கிட் சியாங் நாடாளுமன்ற அவைத் தலைவரா?

லிம் கிட் சியாங் நாடாளுமன்ற அவைத் தலைவரா?

954
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதன் முறையாக எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி கூடவிருக்கும் மலேசிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக (சபாநாயகர்) யாரை நியமிப்பது என பக்காத்தான் ஹரப்பான் கட்சிகள் ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த அவைத் தலைவர் லிம் கிட் சியாங் என பக்காத்தான் வட்டாரங்கள் கோடி காட்டியுள்ளன.

40 ஆண்டுகளுக்கும் மேலான நாடாளுமன்ற உறுப்பினர் அனுபவத்தைக் கொண்ட லிம் கிட் சியாங் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவராக இருப்பார் எனக் கருதப்படுகிறது.

எத்தனையோ முறை நாடாளுமன்ற அவைத் தலைவரால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் – ஏன் நாடாளுமன்றத்திலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்டவர் – என்ற முறையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உணர்வுகளையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்த லிம் கிட் சியாங் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்,

#TamilSchoolmychoice

நாட்டின் இன்னொரு சுவாரசிய அரசியல் திருப்பமாக அந்த முடிவு அமையும்!