Home உலகம் 2-1 : இங்கிலாந்து கனவு கலைந்தது! இறுதி ஆட்டத்தில் குரோஷியா!

2-1 : இங்கிலாந்து கனவு கலைந்தது! இறுதி ஆட்டத்தில் குரோஷியா!

1115
0
SHARE
Ad
உற்சாகக் கொண்டாட்டத்தில் குரோஷியா இரசிகர்கள்

மாஸ்கோ – உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நுழையும் இங்கிலாந்தின் கனவுகளை குரோஷியா தகர்த்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து-குரோஷியா இடையிலான அரை இறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தைத் தோற்கடித்து முதன் முறையாக இறுதி ஆட்டத்தில் நுழையும் குரோஷியா பிரான்சைச் சந்திக்கிறது.

மலேசிய நேரப்படி புதன்கிழமை (ஜூலை 12) அதிகாலை 2.00 மணிக்குத் தொடங்கிய இந்த ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே ஒரு கோல் போட்டு டிரிப்பியர் இங்கிலாந்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 68-வது நிமிடத்தில் குரோஷியாவின் பெரிசிக் ஒரு கோல் போட்டி ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் 90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிவடைந்தும் இரு குழுக்களுமே 1-1 என சம நிலையில் இருந்த காரணத்தால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

அந்த கூடுதல் 30 நிமிடங்களில் குரோஷியாவின் மாண்ட்சுகிக் ஒரு கோல் போட்டு குரோஷியாவை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

தொடர்ந்து இங்கிலாந்து கோல் எதுவும் அடிக்க முடியாததால், வெற்றி பெற்ற குரோஷியா இறுதி ஆட்டத்தில் பிரசான்சைச் சந்திக்கவிருக்கிறது.