Home நாடு ஜசெக நாடாளுமன்றத் தலைமை ஏற்கிறார் அந்தோணி லோக்!

ஜசெக நாடாளுமன்றத் தலைமை ஏற்கிறார் அந்தோணி லோக்!

964
0
SHARE
Ad
அந்தோணி லோக்

கோலாலம்பூர் – கடந்த பல தவணைகளாக நாடாளுமன்றத்தில் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைவராகவும், சில தவணைகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயலாற்றி வந்த லிம் கிட் சியாங், தற்போது அந்தப் பொறுப்பை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் வசம் ஒப்படைத்துள்ளார்.

பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைமைப் பொறுப்பை 77 வயதான லிம் கிட் சியாங், அந்தோணி லோக் வசம் ஒப்படைத்திருப்பது, கட்டம் கட்டமாக தனது அரசியல் பொறுப்புகளை அவர் ஜசெகவின் இளைய நிலைத் தலைவர்களின் தோள்களில் சுமத்தி வருவதைக் காட்டுகிறது.

அதே வேளையில், எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற அவைத் தலைவருக்கான பதவியை லிம் கிட் சியாங் அலங்கரிப்பார் என்ற ஆரூடம்  உண்மையாகும் என்ற எதிர்பார்ப்பை நோக்கியும் நம்மை லிம் கிட் சியாங்கின் இந்த முடிவு நகர்த்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

அந்தோணி லோக் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.  சென்னா சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.