கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டர்) நியமிக்கப்பட்ட ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தொடர்ந்து பிரதமர் துறை அமைச்சராக மாமன்னர் முன்னிலையில் நியமிக்கப்பட்டார்.
பிரதமர் துறையில் ஒற்றுமை மற்றும் சமூக நலம் பொறுப்புகளை அவர் வகிப்பார். இதனைத் தொடர்ந்து துன் மகாதீர் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணியில் 4 இந்திய அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கும் வரலாற்றுபூர்வ சாதனை அரங்கேறியிருக்கிறது.
பின்தங்கிய மலேசிய இனங்களுக்கான முன்னேற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பிரிவு பிரதமர் துறையில் ஏற்படுத்தப்பட்டு, அதற்கான பொறுப்பு வேதமூர்த்திக்கு வழங்கப்படும் என்றும் அதன் மூலம், இந்திய சமுதாயத்திற்கான நலத் திட்டங்களுக்கு அவர் பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.