Home நாடு புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை – மாமன்னர் பாராட்டு

புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை – மாமன்னர் பாராட்டு

1364
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் மாஹ்முட், புதிய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் வெளிப்படைத் தன்மையைப் பாராட்டினார்.

குறிப்பாக, நாட்டின் உண்மையான நிதி நிலைமையை பகிரங்கமாக அறிவிப்பது, செலவினங்கள் கொண்ட திட்டங்களை இரத்து செய்து, செலவினங்களைக் குறைப்பது, சிறந்த நிதி நிர்வாகம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து வரும் புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மாமன்னர் குறிப்பாகத் தனதுரையில் சுட்டிக் காட்டினார்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பை அகற்றியது, பெட்ரோலிய எண்ணெய் விலைகளை நிலைநிறுத்தியது, சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வாழ்க்கைச் செலவினங்களுக்காக உதவித் தொகை வழங்குவது, போன்ற மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் அரசாங்கத் திட்டங்களுக்கும் மாமன்னர் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் இன, மத பேதமின்றி அனைவரும் நாட்டின் கடனைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நிதிக்கு நன்கொடைகளை வழங்கி வரும் கடப்பாட்டிற்கும் மாமன்னர் பாராட்டு தெரிவித்தார்.