Home நாடு வேதமூர்த்தி அமைச்சராக பணிகளைத் தொடக்கினார்

வேதமூர்த்தி அமைச்சராக பணிகளைத் தொடக்கினார்

1732
0
SHARE
Ad
வேதமூர்த்தியின் முதல் நாள் அமைச்சர் பணிகள்

புத்ரா ஜெயா – நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) செனட்டராகவும், பிரதமர் துறையின் அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்ட பி.வேதமூர்த்தி இன்று பிரதமர் துறை அலுவலகத்தின் தனது பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கினார்.

இன்று காலை தனது அலுவலகம் வந்தடைந்த அவரை, அமைச்சு அதிகாரிகள் முன்னின்று வரவேற்று அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முதல் நாள் தனது அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை வேதமூர்த்தி நடத்தினார். அதன் பின்னர் இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

(படம்: நன்றி – வேதமூர்த்தி முகநூல் பக்கம்)