Home நாடு மஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது?

மஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது?

1759
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என அது குறித்த விவரங்களையும் மலேசியாகினி இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி மஇகாவுக்கு நஜிப் தலைமைத்துவத்தின்போது, 2013 பொதுத் தேர்தலை முன்னிட்டு வழங்கப்பட்ட 20,550,000 ரிங்கிட் நிதி எவ்வாறு பிரித்து வழங்கப்பட்டது என தேதி வாரியாக மலேசியாகினி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்தப் பணம் கீழ்க்காணும் தேதிகளில் 2011 முதல் 2013 வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் வழங்கப்பட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது:

  1. 3 இலட்சம் – உலு சிலாங்கூர் நாடாளுமன்ற சேவை மையம் (3 மே 2012)
  2. 10 இலட்சம் – மஇகா (26 ஜூலை 2012)
  3. 2 இலட்சம்  – கெடா மஇகா (15 நவம்பர் 2012)
  4. 3 இலட்சம்  – மஇகா (24 டிசம்பர் 2012)
  5. 20 இலட்சம்  – மஇகா (3 ஜனவரி 2013)
  6. 5 இலட்சம்  – மஇகா மகளிர் பிரிவு (19 மார்ச்    2013)
  7. 2 இலட்சம்  – மஇகா புத்திரி பிரிவு (19 மார்ச் 2013) 
  8. 10 இலட்சம் – மஇகா (29 மார்ச் 2013)
  9. 10 மில்லியன் – மஇகா (18 ஏப்ரல் 2013)
  10. 5 மில்லியன் – மஇகா (26 ஏப்ரல் 2013)

5 மே 2013-ஆம் தேதி நாட்டின் 13-வது பொதுத் தேர்தல் நடந்தேறியது.

#TamilSchoolmychoice

நஜிப் மூலமாக விநியோகிக்கப்பட்ட பணத்தில்  அம்னோவுக்கு மட்டும் 417,414.000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் அனைத்தும் தனக்கு நன்கொடையாக வந்தவை என நஜிப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அந்தப் பணம் 1எம்டிபி மூலம் நடத்தப்பட்ட ஊழல் விவகாரங்களின் மூலம் பெறப்பட்டவை என புலனாய்வு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

அடுத்து:

ஐபிஎப் கட்சிக்கு வழங்கப்பட்டது எவ்வளவு?