Home நாடு யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்

யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்

1593
0
SHARE
Ad
அருணாசலம் நூலை வழங்குகிறார் – அருகில் மாக் மாண்டின் தலைமையாசிரியர் பாஸ்கரன்

பட்டவொர்த் – இந்த ஆண்டு யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் சிறந்த முறையில் தேர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 6 மாதிரி வினா விடைகளுடன் கூடிய தேர்வுத் தாள்களைக் கொண்டு வி ஷைன் நிறுவனம் தயாரித்துப் பதிப்பித்திருக்கும் நூல் “யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி”.

இந்த யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழகாட்டி நூலை பினாங்கு மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பினாங்கு வணிகப் பிரமுகர் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

கடந்த ஜூலை 13-ஆம் தேதி பட்டவொர்த் மாக் மண்டின் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் பிரதிநிதிகளிடம் அருணாசலம் இந்த நூல்களை நேரடியாகவே வழங்கினார்.

மாக் மாண்டின் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் பாஸ்கரன் உரையாற்றுகிறார்
#TamilSchoolmychoice

மாக் மண்டின் தமிழ்ப் பள்ளியின் நிர்வாக வாரியத் தலைவராகவும் அருணாசலம் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாக் மண்டின் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பாஸ்கரன் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார். பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான அமைப்பாளர் திரு சிங்காரவேலு அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம் கருத்து

பினாங்கு மாநிலத்திலுள்ள யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு இந்த நூலை அன்பளிப்பாக வழங்குவது குறித்து செல்லியல் ஊடகத்திடம் கருத்துரைத்த அருணாசலம், “யுபிஎஸ்ஆர் தேர்வு என்பது தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு மிக முக்கியமான தேர்வாகும். ஆறு ஆண்டுக் கல்வியில் கற்றதை ஒரு மாணவன் தேர்வு வாயிலாக எடுத்துக் காட்ட வேண்டியிருப்பதோடு, அடுத்து செல்லும் இடைநிலைப் பள்ளியில் பெறப்போகும் கல்விக்கான முன்னோடியாகவும் யுபிஎஸ்ஆர் தேர்வுகள் திகழ்கிறது. எனவே, இந்தத் தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தமிழ் மொழிக்கான இந்தத் தேர்வு வழிகாட்டி நூலை அன்பளிப்பாக வழங்குகிறேன். பினாங்கு மாநில மாணவர்கள் இந்த நூலின் துணை கொண்டு சிறப்பான தேர்ச்சிகள் அடைந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்று கூறினார்.