Home Video “ஜோகூர் இந்தியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம்” – இராமகிருஷ்ணன் நேர்காணல் (காணொளி)

“ஜோகூர் இந்தியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம்” – இராமகிருஷ்ணன் நேர்காணல் (காணொளி)

2590
0
SHARE
Ad
ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ்.இராமகிருஷ்ணன்

ஜோகூர்பாரு – ஜோரான மாநிலம் என எப்போதும் புகழ்ந்துரைக்கப்படும் மாநிலம் ஜோகூர். நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்று. அதே வேளையில் அம்மாநிலத்தின் அசுரத்தனமான மேம்பாடுகள் – வளர்ச்சிகள் – நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் சர்ச்சைகளாகவும், பிரச்சாரங்களின் மையப் புள்ளிகளாகவும் திகழ்ந்தன என்பதையும் மறுக்கமுடியாது.

அதன் காரணமாகவே, தேசிய முன்னணியின் வலுவான ஆதிக்கத்தின் கீழ் கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வந்த – அம்னோவின் பிறப்பிடம் – தேசிய முன்னணியின் அசைக்க முடியாத கோட்டை – என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ஜோகூர் மாநிலமும் இந்த முறை 14-வது பொதுத் தேர்தலில் எழுந்த அரசியல் சுனாமியால் வீழ்ந்தது.

ஜோகூர் மாநிலத்தில் அமைந்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் புதிய ஆட்சிக் குழுவில் இடம் பெற்றிருப்பவர் ஜசெகவில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் சமூகப் போராட்டவாதி டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன்.

#TamilSchoolmychoice

அண்மையில் செல்லியல் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தான் கடந்து வந்த அரசியல் பாதை, சிலாங்கூர் மாநிலத்தை அரசியல் களமாகக் கொண்டு தீவிரமாக இயங்கி வந்த நிலையில் ஜோகூர் மாநிலத்திற்கு இடம் மாறியது – 2013-இல் லாபிஸ் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டது – நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் பெக்கோக் சட்டமன்றத்தில் போட்டியிட்டு ஆட்சிக் குழு உறுப்பினரானது வரை பல விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார் இராமகிருஷ்ணன்.

அவரது நேர்காணலின் காணொளி (வீடியோ) வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

 

அடுத்து:

– சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து ஜோகூர் மாநிலத்திற்கு அரசியல் களத்தை மாற்றி வந்தது ஏன்?

– ஜோகூரில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் என்ன?

– ஆட்சிக் குழு உறுப்பினராக அனுபவங்கள்…சவால்கள்….

தொடர்ந்து நேர்காணலில் விவரிக்கிறார் இராமகிருஷ்ணன்