Home இந்தியா நடிகர் அஜித் – பினராய் விஜயன் கலைஞரை நலம் விசாரித்தனர்!

நடிகர் அஜித் – பினராய் விஜயன் கலைஞரை நலம் விசாரித்தனர்!

1046
0
SHARE
Ad

சென்னை – இங்குள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலம் தொடர்ந்து தேறி வருவதாகவும், அவரை சுமார் அரை மணி நேரத்திற்கு சக்கர  நாற்காலியில் அமர வைக்கும் பயிற்சிகள் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்களும், ஊடகங்களும் தெரிவித்தன.

இதற்கிடையில் சாதாரணமாக எந்த நிகழ்ச்சிக்கும் தலைகாட்டாத நடிகர் ‘தல’ அஜித், காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் கேட்டறிந்தார்.

அஜித் வந்த சமயத்தில் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனும் பிரபல கண் மருத்துவருமான விஜயசங்கரும் உடனிருந்தார்.

#TamilSchoolmychoice

அவர்கள் மு.க.ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும் இன்று சென்னை வந்து கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். “கலைஞர் எப்போதுமே போராளி. அவர் இந்தப் போராட்டத்தில் இருந்தும் மீண்டு வருவார்” என விஜயன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.