Home நாடு சுங்கை காண்டிஸ் : பிகேஆர் வெற்றி – பெரும்பான்மை சரிவு

சுங்கை காண்டிஸ் : பிகேஆர் வெற்றி – பெரும்பான்மை சரிவு

917
0
SHARE
Ad

ஷா ஆலாம் – சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளர் சவாவி அகமட் முக்னி 15,427 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் 9,585 வாக்குகள் பெற்ற நிலையில் சுயேச்சை வேட்பாளர் கே.மூர்த்தி 97 வாக்குகள் பெற்றார்.

பிகேஆர் 5,842 வாக்குகள் பெரும்பான்மையில் சுங்கை காண்டிஸ் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டாலும், மே 9 பொதுத் தேர்தலோடு ஒப்பிடும்போது வாக்கு எண்ணிக்கை பெருமளவில் பிகேஆர் கட்சிக்கு சரிந்துள்ளது.

மறைந்த பிகேஆர் வேட்பாளர் மாட் சுகைமி மே 9 பொதுத் தேர்தலின்போது நான்கு முனைப் போட்டியில் 12,480 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

அவரது பெரும்பான்மை பாதிக்கும் மேல் குறைந்துள்ளது. பாஸ் மற்றும் அம்னோ மறைமுகக் கூட்டணி காரணமாக பிகேஆர் வேட்பாளரின் வாக்குகள் சரிந்ததாகக் கருதப்படுகிறது.

அதே வேளையில் 49.4 விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே இன்று மாலை 5.30 மணி வரை வாக்களித்தனர். ஆனால் மே 9 பொதுத் தேர்தலில் 85 விழுக்காடு வாக்காளர்கள் இந்தத் தொகுதியில் வாக்களித்தனர். குறைந்த வாக்காளர்கள் வாக்களித்ததும் பிகேஆர் கட்சியின் பெரும்பான்மை குறைவுக்கான காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.