Home நாடு சுங்கை காண்டிஸ் : நஜிப் தேர்தல் விதிமுறைகளை மீறினாரா?

சுங்கை காண்டிஸ் : நஜிப் தேர்தல் விதிமுறைகளை மீறினாரா?

1019
0
SHARE
Ad
சுங்கை காண்டிஸ் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் நஜிப்…

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முதல் நாள் வெள்ளிக்கிழமையோடு (ஆகஸ்ட் 3) முடிவுக்கு வந்தன. வாக்களிப்பு நடைபெறும் நாளில் யாரும் – எந்தக் கட்சியும் – பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்பது தேர்தல் விதிமுறையாகும்.

ஆனால், வாக்களிப்பு நடைபெற்ற சனிக்கிழமை காலை தனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் சுங்கை காண்டிஸ் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட பதிவு ஒன்றில் “சுங்கை காண்டிஸ் சட்டமன்றத்தில் இருந்து பக்காத்தான் ஹரப்பானை வெளியேற்றுங்கள்” என அவர் பதிவிட்டிருப்பது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பான ஒன்று என பெர்சே எனப்படும் தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அவர் தேர்தல் சட்ட விதிகள் பிரிவு 26-இன் கீழ் குற்றம் இழைத்திருக்கிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பெர்சே வலியுறுத்துவதாக அந்த அமைப்பின் இயக்குநர் யாப் சுவீ செங் கூறியிருக்கிறார்.