Home இந்தியா “என்றும் வரலாற்றில் உயிர்த்திருப்பார்” – மோடி புகழாரம்

“என்றும் வரலாற்றில் உயிர்த்திருப்பார்” – மோடி புகழாரம்

647
0
SHARE
Ad

புதுடில்லி – கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு இன்று காலை புதுடில்லியிலிருந்து விரைந்து வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அனுதாபச் செய்தியையும் தமிழிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

நரேந்திர மோடியின் அனுதாபச் செய்தி பின்வருமாறு:

“கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகுந்த துயரை அளிக்கிறது. பாரதத்தின் மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் கலைஞர். ஏழை எளியோரின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட அவர் மக்கள் செல்வாக்கு மிக்கவர். ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். சிறந்த எழுத்தாளர்.
தேச முன்னேற்றத்தோடு பிராந்திய பிரச்சனைகளை தீர்க்கவும் அரும்பாடுபட்ட தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழர்கள் வாழ்வு மேம்படுவதையே இலக்காக கொண்டவர். எதிலும் தமிழகம் முதன்மை பெறுவதை உறுதிசெய்தவர்

#TamilSchoolmychoice

கலைஞர் கருணாநிதியோடு பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. சமூக நீதி நிலைபெறும் வகையில் மிகச்சிறந்த கொள்கைகளை வகுத்த மேதைமை கொண்டவர் அவர்.

சனநாயக மாண்புகள் நிலைக்கும் வகையில் நெருக்கடி நிலையை துணிவோடு எதிர்த்து போர்க்குரல் எழுப்பியதற்காக அவர் என்றும் வரலாற்றில் உயிர்த்திருப்பார். இந்த துயர்மிகுந்த வேளையில் அந்த உயர்ந்த தலைவரின் குடும்பத்தாருக்கும் எண்ணிலடங்கா தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்திற்கும் தமிழகத்திற்கும் கலைஞரின் மறைவு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.”