Home இந்தியா மஇகா சார்பில் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தினார் சரவணன்!

மஇகா சார்பில் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தினார் சரவணன்!

1809
0
SHARE
Ad

சென்னை – கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு உடனடியாக சென்னை விரைந்த தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு மஇகா சார்பில் கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைச் சந்தித்துத் தனது தனிப்பட்ட அனுதாபங்களையும், மஇகா சார்பிலான அனுதாபங்களையும் சரவணன் தெரிவித்துக் கொண்டார்.

கலைஞரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட ஒரே மலேசிய இந்தியத் தலைவர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

உடல் நலம் குன்றிய நிலையில் கலைஞர் மு.கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அங்கு மஇகா தலைவர்கள் குழுவினருடன் இணைந்து சென்ற சரவணன், அவரது உடல் நலம் குறித்து நேரடியாக மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.