Home நாடு நஜிப் வழக்குகள் – இனி ஊடகங்கள் பகிரங்கமாக பதிப்பிக்கலாம்

நஜிப் வழக்குகள் – இனி ஊடகங்கள் பகிரங்கமாக பதிப்பிக்கலாம்

1562
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தன்மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியிடக்கூடாது என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே பெற்றிருந்த தடை உத்தரவை நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி இன்று இரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து இனி ஊடகங்கள் நஜிப் மீதான வழக்குகள் குறித்த விவரங்களை தாராளமாக வெளியிடலாம்.

நஜிப் மீதான குற்றவியல் வழக்குகள் குறித்து ஊடகங்கள் செய்திகள் வெளியிடும்போது அத்துமீறல்கள், விதிமீறல்கள் நிகழ்ந்தால் அது குறித்து மேல்நடவடிக்கை எடுக்க நீதிமன்ற அவமதிப்பு போன்ற சட்டங்கள் போதுமான அளவில் ஏற்கனவே இருப்பதால், இதுபோன்ற ஒரு தடையுத்தரவைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் முழுக்க நீடித்த வாதப் பிரதிவாதங்களின்போது, நஜிப்பின் வழக்கறிஞரான முகமட் ஷாபி அப்துல்லா, நஜிப் மீது சுமத்தப்பட்டுள்ள முறைகேடுகளினால் மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் எழுந்துள்ளதாகவும் இதனால் தனது கட்சிக்காரர் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாகவே குற்றம் இழைத்துவிட்டவர் போல் பார்க்கப்படுகிறார் என்றும் வாதிட்டார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை எதிர்த்து எதிர்வரும் திங்கட்கிழமை தங்களின் தரப்பு மேல்முறையீடு செய்யப் போவதாகவும் ஷாபி அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.