Home நாடு “பாமர மக்களுடன் இரண்டறக் கலந்தவர்” – கருணாநிதிக்கு சேவியர் ஜெயகுமார் அஞ்சலி

“பாமர மக்களுடன் இரண்டறக் கலந்தவர்” – கருணாநிதிக்கு சேவியர் ஜெயகுமார் அஞ்சலி

1344
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – “சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பாமர மக்களுடன் இரண்டறக் கலந்து இறுதிவரை எல்லா மக்களிடமும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த தமிழ்த் தலைவர் கலைஞர் கருணாநிதி” என பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், நீர், நிலம், இயற்கைவள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயகுமார் கலைஞருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

கலைஞர் மறைந்தவுடன் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிட்ட அனுதாபச் செய்தியில் சேவியர் ஜெயகுமார் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:

“கலைஞர் தமிழினத் தலைவர் என உலக மக்களால் போற்றப்பட்டவர். 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த ஒரு மாமனிதரை தமிழக மக்கள் மட்டுமின்றித் தமிழ்ச் சமுதாயமும் இழந்து தவிக்கிறது. சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பாமர மக்களுடன் இரண்டறக் கலந்து இறுதிவரை எல்லா மக்களிடமும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த தமிழ்த் தலைவர் கலைஞர் கருணாநிதியை – பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரை இழந்த துயரம் எம்மையும் வாட்டுகிறது. இந்நாட்டுத் தமிழ் மக்களின் சார்பிலும் இந்நாட்டு அரசின் சார்பிலும் மறைந்த தலைவர் மு.கருணாநிதி அவர்களின் குடும்பத்தினருக்கும், தமிழக மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.