Home உலகம் திருடிய காலி விமானத்தை காட்டுப் பகுதியில் மோதிய ஊழியர்

திருடிய காலி விமானத்தை காட்டுப் பகுதியில் மோதிய ஊழியர்

891
0
SHARE
Ad
சியாட்டல் நகரைக் குறிக்கும் வரைபடம்

சியாட்டல் (அமெரிக்கா) – சியாட்டல் டகோமா அனைத்துலக விமான நிலையத்தின் ஊழியர் ஒருவர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காலியான, பயணிகள் இல்லாத விமானம் ஒன்றைத் திருடி அதை சுமார் ஒரு மணி நேரம் வானில் செலுத்தியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இராணுவ விமானங்கள் அந்த விமானத்தை விரட்டிப் பிடிக்க முற்பட்டிருக்கின்றன. அவர்களுக்கும் ‘டிமிக்கி’ காட்டிய அந்த ஊழியர் விமான நிலையத்திலிருந்து சுமார் 40 மைல்களுக்கப்பால் தான் திருடிய விமானத்தை ஒரு காட்டுப் பகுதியில் மோதி தரையிறக்கியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அந்த 29 வயது ஊழியரும் அந்த விமான மோதலில் உயிரிழந்திருக்கிறார். பரபரப்பான இந்தச் சம்பவம் பயங்கரவாதம் சம்பந்தப்பட்டதல்ல என விவரித்திருக்கும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை விமானத்தைத் திருடிய அந்த ஊழியர் வானில் பறந்து சாகசங்கள் செய்ய முயன்றார் என்றும் அதில் போதிய பயிற்சி இல்லாதவர் என்பதால் விமானத்தை காட்டுப் பகுதியில் மோதினார் என்றும் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்க விமான நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்களை இந்த விமானத் திருட்டு கேள்விக் குறியாக்கியுள்ளது.