Home நாடு மாயமான 18 பில்லியன் : பக்காத்தான் மீது பழி போடுகிறார் நஜிப்!

மாயமான 18 பில்லியன் : பக்காத்தான் மீது பழி போடுகிறார் நஜிப்!

796
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜிஎஸ்டி வசூல் தொகையில் 18 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போனது தொடர்பில் அதைக் கண்டுபிடிக்க நிதி அமைச்சு 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப், அந்தப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி அந்த விவகாரத்தைப் பகிரங்கப்படுத்திய லிம் குவான் எங் மீதும் கேள்விகள் தொடுத்துள்ளார்.

6 விழுக்காடாக இருந்த ஜிஎஸ்டி வரி வசூல் சூழியம் (பூஜ்யம்) விழுக்காடாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி மீதிலான வரிகளை திரும்பச் செலுத்த பக்காத்தான் அரசால் முடியவில்லை – காரணம் இதனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் நஜிப் கூறியிருக்கிறார்.

“ஜிஎஸ்டி வரிகள் அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கில் (Consolidated Trust Fund) வரவு வைக்கப்பட்டன என்றும் மாறாக, திருடப்படவில்லை என்றும் சுங்கத் துறை இலாகா கூறியுள்ளது. 3 மாத காலம் ஜிஎஸ்டி வரிவிலக்கு வழங்கப்பட்டதால் அந்த வரிகளின் மூலம் அரசாங்கம் வசூல் எதனையும் பெறவில்லை. எனவே ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கிலிருந்த, ஜிஎஸ்டி வசூல் நிதியை பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் தனது நடப்பு செலவினங்களுக்குப் பயன்படுத்தி  முடித்திருக்கலாம்” என்றும் நஜிப் விளக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் ஜிஎஸ்டி வரிவசூலில் வரி செலுத்தியவர்களுக்கு திரும்பச் செலுத்துவதற்காக 82.9 பில்லியன் ரிங்கிட் தொகையை சுங்கத துறை இலாகா கோரியதாகவும், ஆனால் 63.5 பில்லியன் ரிங்கிட் தொகை மட்டுமே தங்களுக்குக் கிடைக்கப் பெற்றதாகவும் சுங்கத் துறை இலாகாவின் தலைமை இயக்குநர் டி.சுப்ரமணியம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்தில் இர்வான் செரிகார் அப்துல்லா புகார் ஒன்றையும் செய்திருக்கிறார்.