Home நாடு “ஜிஎஸ்டி வசூல் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது” – இர்வான் செரிகார்

“ஜிஎஸ்டி வசூல் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது” – இர்வான் செரிகார்

1241
0
SHARE
Ad
முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா

புத்ரா ஜெயா – ஜிஎஸ்டி வரிக்காக வசூல் செய்யப்பட்ட 18 பில்லியன் ரிங்கிட் மாயமாகியுள்ளது என நிதி அமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா “அனைத்து ஜிஎஸ்டி வசூல்களும் முறையாகக் கணக்கில் வைக்கப்பட்டன” என்று கூறியிருக்கிறார்.

“வசூல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. திரும்பச் செலுத்தப்பட வேண்டிய ஜிஎஸ்டி வரிகள் முறையாக ஒரு அறவாரியக் கணக்கில் மாதந்தோறும் சுங்க இலாகாவின் தேவைக்கேற்ப செலுத்தப்பட்டன” எனவும் இர்வான் செரிகார் கூறியிருக்கிறார்.

இந்த விவரங்களை நிதி அமைச்சின் கணக்குப் பிரிவின் மூலமும், அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் இலாகா மூலமும் பெற முடியும் என்றும் இர்வான் செரிகார் கூறியுள்ளார்.