Home நாடு “செடிக்கை உருமாற்றுவேன் – மக்கள் கருத்தைக் கேட்டறிவேன்” – வேதமூர்த்தி

“செடிக்கை உருமாற்றுவேன் – மக்கள் கருத்தைக் கேட்டறிவேன்” – வேதமூர்த்தி

1378
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “கல்வியில் மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் : வாய்ப்புகளும் சவால்களும்” என்ற கருப்பொருளோடு கல்வித் துறையில் தொடர்புடைய சுமார் 300 பேராளர்களின் கருத்தரங்கிற்கு பிரதமர் துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி இன்று தலைமை தாங்கி நடத்தியதோடு, கலந்து கொண்டவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் பதிலளித்தார்.

“கடந்த காலங்களைப் போல் அல்லாது மக்களின் கருத்துகள் முதலில் அறியப்பட்டு அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு சாரார் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் விதமாகவோ, ஒரு தரப்பின் விருப்பத்திற்கேற்ப மட்டும் வண்ணமோ செடிக் நடவடிக்கைகள் இனி அமையாது” என்றும் வேதமூர்த்தி உறுதியளித்தார்.

செடிக் எனப்படும் இந்தியர்களுக்கான உருமாற்ற மேம்பாட்டு மையம் கலைக்கப்படாது என்றும் கூறிய அவர் அதன் நல்ல திட்டங்கள் தொடரப்படும் என்றும் கூறினார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)